Wednesday 16 September 2015

நவாவரண கீர்த்தனைகள்

கணபதி த்யானம் 
(ராகம் - நாட்டை, தாளம் - ஆதி)


Check this out on Chirbit


Check this out on Chirbit

அகிலாண்டேஸ்வரி த்யானம் 
(ராகம் - பூர்வி கல்யாணி, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

முதல் ஆவரணம் - த்ரைலோக்ய மோஹன சக்ரம் 
(ராகம் - துர்கா, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

இரண்டாம் ஆவரணம் - ஸர்வாச பரிபூரக சக்ரம்
(ராகம் - பைரவி, தாளம் - கண்ட ஜாதி திரிபுட தாளம்)


Check this out on Chirbit

மூன்றாம் ஆவரணம் - ஸர்வ ஸம்க்ஷோபன சக்ரம் 
(ராகம் - ரஞ்சனி, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

நான்காம் ஆவரணம் - ஸர்வ சௌபாக்ய தாயக சக்ரம் 
(ராகம் - ஸ்ரீ, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

ஐந்தாம் ஆவரணம் - ஸர்வார்த்த ஸாதக சக்ரம் 
(ராகம் - கமலா மனோஹரி, தாளம் - ரூபகம்)


Check this out on Chirbit

ஆறாம் ஆவரணம் - ஸர்வ ரக்ஷாகர சக்ரம் 
(ராகம் - மோகனம், தாளம் - மிஸ்ர சாபு)


Check this out on Chirbit

ஏழாம் ஆவரணம் - ஸர்வ ரோகஹர சக்ரம் 
(ராகம் - சரஸ்வதி, தாளம் - ரூபகம்)


Check this out on Chirbit

எட்டாம் ஆவரணம் - ஸர்வ சித்திப்ரதாயக சக்ரம் 
(ராகம் - கீரவாணி, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

ஒன்பதாம் ஆவரணம் - ஸர்வானந்தமய சக்ரம் 
(ராகம் - ரேவதி, தாளம் - ஆதி)


Check this out on Chirbit

மங்களம் 
(ராகம் - லலிதா, தாளம் - ரூபகம்)


Check this out on Chirbit

Monday 17 August 2015

மங்களாஸாஸனம்

ராகம்: லலிதா
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜயதி

மத்யம கால சாஹித்யம்
அவ்யாஜ கருணா மூர்த்தி ஜம்புகேஸ்வருணி ராணி

அனுபல்லவி
சுக ஸனகாதி அர்ச்சித ஸுமுகி சுவாஸினி

மத்யம கால சாஹித்யம் 
கஜாரண்ய நிவாஸினி கஜமுக ஸ்கந்த ஜனனி

சரணம்
ஸுமேரு ஷைல ஸ்ரீ புர கதம்ப வன மத்ய
சிந்தாமணி க்ருஹாந்த காமேஸ்வராங்கஸ்திதே
நவாவரண கீர்த்தன சிந்தித சுப தாயிகே
துஷ்க்ருத ஸம்ஹாரினே மாம்பாஹி லலிதே

அர்த்தம்:
மிகுந்த கருணை கொண்டவளும், ஜம்புகேஸ்வரரின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரிக்கு என்றும் வெற்றி.

சுக ப்ரம்மம், சனகர் முதலிய முனிகள், அம்பாளை அர்ச்சிக்கிறார்கள். அழகிய முகமுடையவள். மங்களமானவள்.  கஜாரண்யம் எனப்படும் திருவானைக்காவில் வசிப்பவள். கஜமுகனான வினாயகனையும், முருகனையும் ஈன்றவள்.

சுமேரு மலையின் மேல் இருக்கும் ஸ்ரீபுரத்தில், கதம்பவனத்தின் மத்தியில் உள்ள, சிந்தாமணி க்ரஹத்தினுள், காமேஸ்வரரின், மடியில் அமர்ந்திருக்கிறாள். நவாவர்ண கீர்த்தனைகளை நினைத்தாலே, நற்பலன்களை தருவாள். தீமைகளை அழிப்பாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த  லலிதாம்பிகை நம்மை காக்கட்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday 15 August 2015

ஒன்பதாம் ஆவரணம்

ராகம்: ரேவதி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி த்ரிபுரசுந்தரி
இச்சா சக்தி ஞான சக்தி க்ரியா சக்தி ரூபிணி

மத்யம கால சாஹித்யம்
ஸ்ரீபுர பிந்து மத்ய நிலயே
ஸர்வானந்தமய சக்ர வாசினே

அனுபல்லவி
சந்திர சூர்ய வஹ்னி மண்டல மத்யே
பஞ்சப்ரம்மாஸனஸ்திதே ரக்ஷிதே

சரணம்
பராபராதி ரஹஸ்ய யோகினி பூஜிதே லலிதே
பரமேஸ்வர ப்ரிய பரமந்த்ர ரூப பாமர ஜன பாலிதே
ராகு க்ரஹ சந்தோஷ காரனே சச்சிதானந்தமயி சின்மயி
நீல வஸ்த்ர தாரினே கோமேதக ரத்ன மணி மாலா கரனே

அர்த்தம்:
த்ரிபுரசுந்தரியான அகிலாண்டேஸ்வரி, இச்சா, க்ரியா, ஞான சக்தி வடிவுடையாள். ஸ்ரீ சக்ரத்தின் மையமான பிந்துவில் நிலைபெற்றுள்ளாள். ஸர்வானந்தமய சக்ரத்தில் வசிக்கிறாள்.

சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி ஆகிய மண்டலங்களில் வசிக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய ப்ரம்மங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அனைவரையும் காக்கிறாள். 

பராபராதி ரஹஸ்ய யோகினிகளால் வணங்கப்படுகிறாள். அவளே லலிதா. பரமேஸ்வரனின் ப்ரியத்திற்கு உரியவள். மந்த்ர ஸ்வரூபம் ஆனவள். பாமர மக்களை காக்கிறாள். ராகுவின் மகிழ்ச்சிக்கு வழிவகுத்து அவர் அருள் நமக்கு கிடைக்கச்செய்கிறாள். சத், சித், ஆனந்த மயமானவள். தூய அறிவுடையவள். நீல வஸ்த்ரத்தினை உடுத்தி, கோமேதக ரத்ன மாலையை கையில் வைத்துள்ளாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday 13 August 2015

எட்டாம் ஆவரணம்

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸுக ப்ரதாயினி
கதம்ப வன வாஸினி பாலயமாம் ஸ்ரீ

அனுபல்லவி
ஸர்வஸித்திப்ரதாயக சக்ர நிவாஸினி
அதி ரஹஸ்ய யோகினி ஸமூஹ ஸேவிதே

சரணம்
ஸ்ரீபுர த்ரிகோணக வாஸினி கௌலினி
த்ரிகுணாத்மிகே  பாலே பண்டாஸுர பஞ்சனி
வைடூர்ய மணி மாலா தாரிணி ஹம்ஸினி
கேது க்ரஹ ப்ரீத்யர்த்த காரணி பூரணி

அர்த்தம்:
கதம்ப வனத்தில் வசிப்பவளும், சுகத்தினை அளிப்பவளுமான அகிலாண்டேஸ்வரி, என்னை காக்கட்டும்.

ஸர்வ ஸித்தி ப்ரதாயக சக்ரத்தில் வசிப்பவளான அவளை, அதி ரஹஸ்ய யோகினிகள் வணங்குகிறார்கள்.

ஸ்ரீபுரத்தின் முக்கோணத்தில் வசிக்கும் கௌலினி, முக்குணங்களையும் தன்வசப்படுத்தியவள். அவளே, பாலா. பண்டாசுரனை வதைத்தவள். வைடூர்ய மணி மாலையினை அணிந்தவள். அன்னம் போன்றவள். கேது த்ருப்தி அடைய காரணமானவள். முழுமையானவள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday 12 August 2015

ஏழாம் ஆவரணம்

ராகம்: சரஸ்வதி
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி வாணி ரமா ஸேவிதே
அஷ்டகோணஸ்திதே த்ரிபுரஸித்தாதி பூஜிதே

அனுபல்லவி
வசின்யாதி வாக்தேவதா வந்தித மனோலாஸினி

மத்யம கால சாஹித்யம்
ஸர்வரோகஹர சக்ரவாஸினி ரஹஸ்ய யோகினி

சரணம்
வித்யா அவித்யா ஸ்வரூபிணி
சிதானந்த ப்ரகாசினி
புத க்ரஹ ப்ரீத்யர்த்தே
மரகத மணி கர வலயே

அர்த்தம்:
சரஸ்வதியும், லக்ஷ்மியும் வணங்கும் அகிலாண்டேஸ்வரி, அஷ்டகோணம் எனப்படும், எட்டு முக்கோணங்களாலான  ஆவர்ணத்தில் இருக்கிறாள். திரிபுரஸித்தா பூஜிக்கிறாள். 

வசினி முதலிய எட்டு வாக்தேவதைகள் இங்கு இருந்து வழிபாடு செய்கிறார்கள். அதனால் மனம் மகிழ்கிறாள். ஸர்வரோகஹர சக்ரத்தில் வசிக்கிறாள். ரஹஸ்ய யோகினிகள் அன்னையை இங்கு வணங்குகிறார்கள்.

அறிவுள்ள அஜடமாகவும், அறிவற்ற ஜடமாகவும் இருப்பவள் அம்பாள். தூய்மையான ஆனந்தத்தினால் ப்ரகசிப்பவள்.  புதனின் அருள் கிடைக்கச்செய்பவள். மரகதத்தினால் ஆன வளையல்களை கரத்தில் அணிந்திருப்பவள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday 10 August 2015

ஆறாம் ஆவரணம்

ராகம்: மோகனம்
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜய ஜகதீஸ்வரி
சிவகாமேஸ்வர ப்ரிய மனோஹரி நமஸ்தே

அனுபல்லவி
ஸர்வக்ஞாதி தச சக்தி கேலித அந்தர் தசார
சக்ரேஸ்வரி த்ரிபுர மாலினி சூலினி

சரணம்
ஸர்வரக்ஷாகர சக்ர நிலயே ஸதயே
நிகர்ப்ப யோகினி கண சேவித ஸகலே
சூர்ய க்ரஹ ப்ரீத்யர்த்த அனுக்ரஹ காரனே
மோகன மாணிக்யா பரண அலங்க்ருதே

அர்த்தம்:
உலக நாயகியான அகிலாண்டேஸ்வரியே, வெற்றி அளிப்பவளே, காமேஸ்வரரான சிவனின் விருப்பத்திற்கு உரியவளே, அழகானவளே, உனக்கு என் நமஸ்காரங்கள்.

ஸர்வக்ஞா முதலிய 10 சக்திகள் வீற்றிருக்கும் 10 உட்புற முக்கோணங்களால் ஆன அந்தர் தாசாரம் என்ற ஆவரணத்தின் ஈஸ்வரியாக, த்ரிபுரமாலினியாக, சூலத்தை கையில் கொண்டு அமர்ந்திருக்கிறாய். 

ர்வரக்ஷாகரம் என்ற இந்த ஆவரணத்தில் இருந்து, அனைவரையும் காத்து அருள்கிறாள். அவளே ஸதி தேவியும் ஆவாள். நிகர்ப்ப யோகினியால் வணங்கப்படுகிறாள்.  சூர்ய க்ரஹத்தின் அனுக்ரஹம் கிடைக்கச்செய்கிறாள். அழகிய மாணிக்க ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கிறாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday 7 August 2015

ஐந்தாம் ஆவரணம்

ராகம்: கமல மனோஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி கமல மனோஹரி
பஹிர் தசார விஹாரினே பஞ்ச க்ருத்ய பராயனே

அனுபல்லவி
த்ரிபுராஸ்ரீ வந்திதே குலோதீர்ண யோகினி சமூஹ சேவிதே

மத்யம கால சாஹித்யம் 
ஸர்வார்த்தஸாதக சக்ரமயே  ஸகலகார்ய சித்தி ப்ரதாயிகே சிவே

சரணம்
கமலா கோடி சேவித லலிதா பரமேஸ்வரி
ஸகல ஜீவ பூஜித சங்கட பய மோசனி
இந்த்ர நீல ரத்ன  ஹார சுந்தர கண்ட வதனே - ரவி
புத்திர சனைச்சர க்ரஹ ப்ரீத்யர்த்த காரனே

அர்த்தம்:
அழகிய தாமரை மலரின் மனதினை கவரும் அழகுடைய அகிலாண்டேஸ்வரி, வெளியில் உள்ள 10 முக்கோணங்கள் (பஹிர் தாசாரம்) என்ற ஆவர்ணத்தில் இருக்கிறாள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்து தொழில்கள் செய்கிறாள்.

த்ரிபுராஸ்ரீ இந்த ஆவர்ணத்தின் தலைவி. அவள் வணங்குகிறாள். குலோதீர்ண யோகினிகளும் ஸேவித்துக்கொள்கின்றனர். சர்வார்த்தசாதகம் என்னும் இந்த ஆவர்ணத்தின் மையத்தில் ஆட்சி புரியும் அன்னை, அனைத்து கார்யங்களையும் தடையின்றி நடத்தி வைக்கிறாள். மிகவும் மங்களமானவள்.

கோடி தாமரைகளுக்கு இணையான அழகுடைய லக்ஷ்மி, லலிதா பரமேஸ்வரியான அகிலாண்டேஸ்வரியை  வணங்குகிறாள். எல்லா உயிர்களும் அவளை பூஜித்தால், அவற்றின் சங்கடங்கள், பயம் ஆகியவற்றை அறுக்கிறாள். இந்த்ர நீலத்தால் ஆன மாலையினை தன்  அழகிய கழுத்தில் அணிந்துள்ளாள். சூர்யனின் புதல்வனான சனைச்சரனின் அருள் கிடைக்க காரணமாய் உள்ளாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday 4 August 2015

நான்காம் ஆவரணம்

ராகம்: ஸ்ரீ
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ சிவசங்கரி
சதுர் தசார ஸௌபாக்யதாயினி

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸௌபாக்யதாயக நிலயே
த்ரிபுரவாஸின்யாதி ஸேவிதே

அனுபல்லவி
சதுர்தச த்ரிகோனக சக்தி ஸ்திதே
ஸம்ப்ரதாய யோகினி விசேஷ பூஜிதே

சரணம்
சுந்தர முக்தால ஹார கரத்ருதே
சந்த்ர க்ரஹ அனுக்ரஹநுதே
மந்த்ர தந்தர யந்த்ர ஸ்வரூபிணி கமலே
மந்த்ரினி தண்டினி ஸன்னுத ஸகலே

அர்த்தம்:
சிவ சங்கரியான அகிலாண்டேஸ்வரி 14 முக்கோணங்கள் கொண்ட ஆவர்ணத்தில் அமர்ந்து சகல சௌபாக்யங்களையும் நமக்கு தருகிறாள். ஸர்வஸௌபாக்யதாயக சக்ரத்தில் இருக்கும் அவளை த்ரிபுரவாசினி முதலியோர் வணங்குகிறார்கள்.

ஒரோரு முக்கோனத்திலும் ஒரு சக்தி உள்ளாள். சம்ப்ரதாய யோகினிகள்  இந்த ஆவர்ணத்தில் உள்ளனர்.

அழகிய முத்து மாலையினை கையில் வைத்துள்ளாள். சந்திரனின் அருள் கிடைக்க வழி வகுக்கிறாள். அனைத்து மந்த்ர, தந்தர, யந்த்ர ஸ்வரூபமாக உள்ளாள். மந்த்ரினி (மாதங்கி) மற்றும் தண்டினி (வாராஹி) 
சஹிதமாக வீற்றிருக்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday 1 August 2015

மூன்றாம் ஆவரணம்

ராகம்: ரஞ்சனி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ மாத்ரே அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ சக்ரஸ்தித த்ரிதிய ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸம்க்ஷோபன சக்ர நிலயே
ஸர்வ ஜீவ தயா சாகரே 

அனுபல்லவி
அனங்க குஸுமாத்யஷ்ட  தேவி சேவிதே
குப்ததர யோகினி பரிவாரே

சரணம்
வஜ்ர ரத்ன மணி மாலா தரனே
சுக்ர க்ரஹ அனுக்ரஹனுத காரனே
அஷ்டதளாசனஸ்தித ரஞ்சனி வந்திதே
அஷ்ட மகா சித்தி வர்ஷய வர்ஷய

அர்த்தம்:
சிறந்த தாய் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ப்ரகாரத்தில் இருக்கிறாள். ஸர்வஸம்க்ஷோபனம் என்று பெயர் கொண்ட அந்த சக்ரத்தில், அனைத்து உயிர்களுக்கும் தயை புரிகிறாள்.

அனங்க குஸுமா முதலிய 8 தேவிகள் அன்னையை இந்த ஆவரணத்தில் வணங்குகிறார்கள். இங்கு உள்ள யோகினிகள் குப்ததர யோகினிகள் ஆவார்கள்.

வைர ரத்ன மாலையினை அணிந்துள்ளாள். சுக்ரனின் அனுக்ரஹம் கிடைக்க அருள்வாள். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையான இந்த ஆவர்ணத்தில் உள்ள ரஞ்சனியினை பூஜிப்பதால், அஷ்ட மஹா சித்திகளும் நமக்கு கிடைக்கும் .

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday 31 July 2015

இரண்டாம் ஆவரணம்

ராகம்: பைரவி
தாளம்: கண்ட ஜாதி த்ரிபுடை (2 கலை)


பல்லவி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பாலயமாம்
ஸர்வாசபரிபூரக சக்ரேஸ்வரி

அனுபல்லவி
ஸ்ரீ மத் த்ரிபுரசுந்தரி குப்த யோகினி

மத்யம கால சாஹித்யம் 
ஷோடசதள நித்யா தேவி சமூஹே த்விதிய ப்ரகாரே வேத சாரே

சரணம்
சங்கீத ரஸிகே சிவே கரத்ருத
அங்குச தனுர் பாச புஷ்ப தரனே
அங்காரக அனுக்ரஹனுதே  ஸ்ரீ லலிதே
மங்கள ப்ரவாள மாலா கரனே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் இரண்டாவது ஆவர்ணமான ஸர்வாசபரிபூரக சக்ரத்தின் ஈச்வரியான அகிலாண்டேஸ்வரி என்னை காக்க வேண்டும்.

த்ரிபுரசுந்தரியும், குப்த யோகினியும், 16 நித்யா தேவிகளும் உன்னை இந்த 16  இதழ்களை கொண்ட இந்த தாமரையில் சூழ்ந்துள்ளனர். நீயே வேத சாரம்.

சங்கீதத்தை ரஸிப்பவள் நீ. மங்களமானவள் நீ. உன் கரங்களில் அங்குசம், பாசம், ஐந்து புஷ்பங்கள், கரும்பு வில் ஆகியவற்றை வைத்துள்ளாய் . ஹே லலிதே, இந்த ஆவரணத்தில் உன்னை வைத்து துதித்தால் அங்காரகனின் அருள் கிடைக்க உதவுகிறாய். மங்களமான, சிவப்பு நிறமுடைய பவழ மாலையினை உன் கரங்களில் வைத்துள்ளாய்.

தாளம்: கண்ட ஜாதி த்ரிபுட தாளம் - ஆதி தாளம் போல், அனால் நடு விரல் எண்ணிய பிறகு ஆள்காட்டி விரலையும் எண்ண வேண்டும். மொத்தம் 9 அக்ஷரங்கள் உள்ளது இத்தாளம். அதாவது, 
1 தட்டு = 1
சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல், ஆள் காட்டி விரல் = 4
பின் 
1 தட்டு, 1 திருப்பு, 1 தட்டு, 1 திருப்பு = 4

மொத்தம் = 1+4+4 = 9

2 கலை என்றால், இருமுறை ஒவ்வொரு அங்கங்களையும் செய்ய வேண்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday 29 July 2015

முதல் ஆவரணம்

ராகம்: துர்கா
தாளம்: ஆதி
பல்லவி
அகிலாண்டேஸ்வரி துரித நிவாரிணி
த்ரைலோக்ய மோகன சக்ர நிவாசினி

அனுபல்லவி

அப்புஸ்தல வாஸ ஜம்புகேஸ்வர
மனோஹரி மாதவ சோதரி ஸ்ரீ கரி

சரணம்

சதுரஸ்ர பூபுர சக்ரேஸ்வரி த்ரிபுரே
சதுஸ் ஷஷ்டி கோடி யோகினி பரிவாரே
சம்க்ஷோபினி அணிமாதி சித்தி சமூஹே
தசமுத்ர ஆராத்ய ப்ரதம ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்

ப்ருஹஸ்பதி க்ரஹ அனுக்ரஹனுதே
ப்ரகட யோகினி சமூஹ சேவிதே
புஷ்பராக ரத்ன மணிமய தரே
சரணாகத ஜன சம்ரக்ஷிதே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் முதல் ஆவர்ணமான த்ரைலோக்ய மோகன சக்ரத்தில் வசிக்கும் அகிலாண்டேஸ்வரி, அடியார்களின் துன்பங்களுக்கு ,விரைந்து வந்து ஆறுதல் அளிப்பவள்.

பஞ்ச பூத ஸ்தலங்களுள் நீர் (அப்பு) ஸ்தலமான ஜம்புகேஸ்வரத்தில் வசிக்கும் ஜம்புகேஸ்வரரின் மனதிற்கு உகந்தவள். மாதவனின் சஹோதரி மற்றும் மங்களம் தருபவள்.

சதுரமான வடிவு கொண்ட முதல் ஆவர்ணமான பூபுரத்தின் தலைவி த்ரிபுரா. அவளோடு சேர்ந்த 64 கோடி யோகினிகள் இந்த ஸ்ரீ புரத்தினுள் உள்ளனர். சம்க்ஷோபினி முதலான 10 சக்திகள், அணிமா முதலான 8 சக்திகள் மற்றும் 10 முத்ரா சக்திகள் அன்னையை இந்த முதல் ஆவர்ணத்தில் ஆராதிக்கிறார்கள்.

இந்த ஆவர்ணத்தில் அம்பிகையை ஆராதிப்பதால், குரு (ப்ருஹஸ்பதி) அருள் கிடைக்கும். இந்த ஆவரணத்தின் யோகினிகள், ப்ரகட யோகினி ஆவார்கள். புஷ்பராக ரத்ன மாலையினை அம்பாள் அணிந்துள்ளாள். தன்னை சரணடைந்தவர்களை காத்தருள்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday 28 July 2015

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி த்யானம்

ராகம்: பூர்வி கல்யாணி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ சக்ர நாயகி அகிலாண்டேஸ்வரி
தீன தயாபரி பாலயமாம்

அனுபல்லவி
ஸ்ரீ நகரேஸ்வரி ஸ்ரீ ஹரி சோதரி
ஸ்ரீ வித்யோபாஸன ப்ரியகரி சங்கரி

சரணம்
பாவ ராக தாள ஸ்வரூபிணி
ப்ரபாத கால பார்வதி
அபராஹ்ன கால மஹா லக்ஷ்மி
ஸந்த்யா சமயே சரஸ்வதி

மத்யம கால சாஹித்யம்
நவராத்ரி பூஜா நந்திதே
நவாவரண கீர்த்தன ப்ரியே
நவ வித யோகினி பரிவரே
நதஜன ஸமூஹ ஸம்ரக்ஷிதே

அர்த்தம்:சாமானியவர்களுக்கு தயை புரிபவளும், ஸ்ரீ சக்ரத்தின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரியே, உன்னை வணங்குகிறேன்.

ஸ்ரீ நகரம் என்னும் இடத்திற்கு தலைவியே, ஸ்ரீ ஹரியின் (விஷ்ணு)  சஹோதரியே, ஸ்ரீ வித்யா உபாசனையில் பெரும் விருப்பம் கொண்டவளே, சங்கரனின் மனைவியே -எல்லாம் நீயே

சங்கீதத்தின் முக்கிய அம்சமான பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் உருவம் நீ.காலையில் பார்வதியாகவும், மதியத்தில் லக்ஷ்மியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் நீ இருக்கிறாய்.

நவராத்ரியில் உனக்கு அளிக்கப்படும் பூஜையினால் மனம் மகிழ்வாய். நவாவரண கீர்த்தனைகளிலும் மிகுந்த ஆசை உடையவள். உன்னை சுற்றி 9 விதமான யோகினிகள் உள்ளனர். சாதாரண மானிட சமூஹத்தை பரிவோடு காப்பவள்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Monday 27 July 2015

கணபதி த்யானம்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி


பல்லவி
பிரசன்ன கணபதே நமோஸ்துதே
பிரணவ ஸ்வரூபா பார்வதி சுதா

அனுபல்லவி
கரத்ருத பாச அங்குச தரனே
சுர பூஜித பய சங்கட ஹரனே

சரணம்
ஸ்ரீ வித்யோபாசன பிரதம ஆராதகா
சிவ அனுக்ரஹநுத வாரண முகா
அகிலாண்டேஸ்வரி சாந்த்யத காரண
கஜாரண்ய க்ஷேத்ர மத்ய நிவாஸா

மத்யம கால சாஹித்யம்
பண்ட சைன்ய ப்ரதிஷ்டித விக்ன யந்த்ர நிர்பின்ன விக்னேஸ்வரா
பண்டாசுர மத கண்டன வைபவ சக்தி சேன முக்ய காரணா

அர்த்தம்:
பிரணவ ஸ்வரூபனும், பார்வதி புத்ரனுமான பிரசன்ன கணபதிக்கு என் முதற்கண் வணக்கம். 

நீ உன் கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் வைத்திருப்பாய். நன்மக்கள் உன்னை வணங்கினால் அவர்களின் பயம், சங்கடம் அனைத்தையும் போக்கி விடுவாய்.

ஸ்ரீ வித்யா உபாசகர்களில் முதன்மையானவன் நீ. பார்வதி தேவி உன்னை உருவாக்கியவுடன், "நான் நீராட செல்கிறேன். யாரையும் உள்ளே விடாதே" என்று கூறினார். அப்போது அந்த இடத்திற்கு வந்த பரமசிவனையே நீ உள்ளே விடவில்லை. அதனால் அவர் கையால் தலை அறு பட்டு பின் பார்வதி தேவி தனக்கு நீ வேண்டும் என்று சிவனிடம் கேட்டதால், அவர் அருளால் வாரண முகனாக மீண்டும் வந்தாய்.
நீ உனது அன்னையான அகிலாண்டேஸ்வரியின் எதிரில் இருப்பதால் தான், எப்போதும் சாந்தஸ்வரூபிணியாக இருக்கிறாள். கஜாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் திருவானைக்கா என்ற இடத்தின் மையத்தில் இருக்கிறாய்.

பண்டாசுரனை எதிர்த்து, ஸ்ரீ லலிதாம்பிகை போரிட்ட போது, பண்டாசுரனின் சைன்யம், குறுக்கு வழியில் அம்பிகையின் படையை தோற்கடிக்க, விக்ன யந்த்ரத்தினை வைத்தனர். அதனை செயலிழக்க செய்தவன் நீ. பண்டாசுரனை வீழ்த்தியதில் சக்தியின் படையில் முக்யமான காரண கர்த்தா நீ.

கஜானனம் ஸ்லோகம் - நாட்டை ராகம் கேட்க:
Check this out on Chirbit

பிரசன்ன கணபதே - நாட்டை ராகம் - ஆதி தாளம் கேட்க:
Check this out on Chirbit

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரணம்

ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையர் அவர்கள், தேவி ஸ்ரீ காமாக்ஷியின்  பேரில் நவாவரணம் பாடினார். அதனால் தூண்டப்பட்ட ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், அவர் பிறந்த ஊரான திருவாரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரணம் பாடினர்.

இவர்கள் இருவரின் நவாவரணங்களை கேட்டு அனுபவித்ததின் பயனாக எனக்கும்  நான் வளர்ந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் அருகாமையில் இருக்கும் திருவானைக்கா என்கிற ஜம்புகேஸ்வரத்தில் அமர்ந்து நல்லருள் பொழியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் மீது நவாவரணம் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

அவள் அருளால் அவள் தாள் வணங்கி, அவளுக்கு எதிரே அமர்ந்து, அவள் முகத்தில் புன்முறுவல் மாறாது  கருணை பொழிய வைக்கும் ஸ்ரீ பிரசன்ன கணபதியின் அருளாசியுடன் இந்த கீர்த்தன தொகுப்பை அகிலாண்டேஸ்வரியின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நம:

நவாவரண கீர்த்தன தொகுப்பு

நவாவரணம் என்பது, தேவி உபாசனையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இதில், அம்பிகையை 9 ஆவரணம் (சுற்று)  கொண்ட ஸ்ரீ சக்ரத்தில் வைத்து பூஜை செய்வார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒவ்வொரு சக்தி, யோகினி இருப்பார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒரு பெயர் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை அளிக்கும். 

இந்த நவாவரணத்தில், இவற்றைத்தவிர, ஒவ்வொரு நவக்ரஹ தேவதை, அந்தந்த தேவதைக்குரிய ரத்னங்களை அன்னை அணிந்திருப்பதாக பாடியுள்ளேன். வித்வான் ஸ்ரீ M.K.வெங்கட்ராமன் அவர்களின் "ஊத்துக்காடு வேங்கட கவி காமாக்ஷி நவாவர்ண கீர்த்தனைகள்" என்ற புத்தகத்தில், ஆந்திர மாநிலத்தில், இவ்வாறு 9 ஆவரணத்திற்கும் ஒரு நவக்ரஹ தேவதை, ஒரு ரத்னம் வைத்து பூஜிப்பார்கள் என்று கூறி இருந்தார். அவற்றை வைத்து இவ்வாறு எழுதியுள்ளேன்.

தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.

ஆதி சங்கரர், அகிலாண்டேஸ்வரியின் செவிகளில் ஸ்ரீ சக்ர தாடங்கங்களை ப்ரதிஷ்டை செய்வதற்கு முன் உக்ரமாக இருந்தாள். அவர் ப்ரதிஷ்டை செய்த பின், சாந்த ஸ்வரூபிணியாக மாறினாள். என்றும் சாந்தமாக இருப்பதற்காக, மகன் விநாயகரின் திரு உருவத்தையும் சிலாரூபமாக அம்பிகையின் எதிரில் ப்ரதிஷ்டை செய்தார். அவரே பிரசன்ன கணபதி.

அந்த பிரசன்ன கணபதியினை வணங்கி, விக்னங்கள் ஏற்படாமல் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று வேண்டி, கணபதி த்யான கீர்த்தனம் அமைய பெற்றுள்ளது. நாட்டை ராகத்தில் உள்ளது இந்த கீர்த்தனை.

அடுத்து, அகிலாண்டேஸ்வரி த்யான கீர்த்தனை, பூர்வி கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது. இதில், அவளை பற்றி பாட அவள் அருள வேண்டும் என்பது தான் பிரார்த்தனை.

இதனை தொடர்ந்து 9 ஆவரணங்கள். ஆவரணத்தின் பெயர், ராகம், நவக்ரஹ தேவதை, ரத்னம் என்னும் படியாக,

1. த்ரைலோக்யமோகன சக்ரம் - துர்கா, ப்ருஹஸ்பதி, புஷ்பராகம் 
2. ஸர்வாசபரிபூரக சக்ரம் - பைரவி, அங்காரகன், பவழம் 
3. ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் - ரஞ்சனி, சுக்ரன், வைரம் 
4. ஸர்வசௌபாக்யதாயக சக்ரம் - ஸ்ரீ, சந்திரன், முத்து
5. ஸர்வார்த்தசாதக சக்ரம் - கமலா மனோஹரி, நீலம், சனைஸ்சரண்    
6. ஸர்வரக்ஷாகர சக்ரம் - மோகனம், மாணிக்கம், சூரியன் 
7. ஸர்வரோகஹர சக்ரம் - சரஸ்வதி, மரகதம், புதன் 
8. ஸர்வசித்திப்ரதயாக சக்ரம் - கீரவாணி, கேது, வைடூர்யம் 
9. ஸர்வானந்தமைய சக்ரம் - ரேவதி, ராகு, கோமேதகம் 

இதற்கு அடுத்து, மங்களாஸாசன  கீர்த்தனை. அம்பிகையை வணங்கி, என்றும் அவளுக்கு வெற்றி என்று பாடுவதாக, லலிதா ராகத்தில்  அமைந்துள்ளது.

இதில் எல்லா ராகங்களும் (கணபதி த்யான கீர்த்தனத்தை விடுத்து) அம்பாள் பெயராலேயே அமைந்துள்ளது.

அவ்யாஜ கருணாமூர்த்தி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அனைவருக்கும் நல்லருள் புரிய என்றும் வேண்டும்,

சரண்யா