Friday 31 July 2015

இரண்டாம் ஆவரணம்

ராகம்: பைரவி
தாளம்: கண்ட ஜாதி த்ரிபுடை (2 கலை)


பல்லவி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பாலயமாம்
ஸர்வாசபரிபூரக சக்ரேஸ்வரி

அனுபல்லவி
ஸ்ரீ மத் த்ரிபுரசுந்தரி குப்த யோகினி

மத்யம கால சாஹித்யம் 
ஷோடசதள நித்யா தேவி சமூஹே த்விதிய ப்ரகாரே வேத சாரே

சரணம்
சங்கீத ரஸிகே சிவே கரத்ருத
அங்குச தனுர் பாச புஷ்ப தரனே
அங்காரக அனுக்ரஹனுதே  ஸ்ரீ லலிதே
மங்கள ப்ரவாள மாலா கரனே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் இரண்டாவது ஆவர்ணமான ஸர்வாசபரிபூரக சக்ரத்தின் ஈச்வரியான அகிலாண்டேஸ்வரி என்னை காக்க வேண்டும்.

த்ரிபுரசுந்தரியும், குப்த யோகினியும், 16 நித்யா தேவிகளும் உன்னை இந்த 16  இதழ்களை கொண்ட இந்த தாமரையில் சூழ்ந்துள்ளனர். நீயே வேத சாரம்.

சங்கீதத்தை ரஸிப்பவள் நீ. மங்களமானவள் நீ. உன் கரங்களில் அங்குசம், பாசம், ஐந்து புஷ்பங்கள், கரும்பு வில் ஆகியவற்றை வைத்துள்ளாய் . ஹே லலிதே, இந்த ஆவரணத்தில் உன்னை வைத்து துதித்தால் அங்காரகனின் அருள் கிடைக்க உதவுகிறாய். மங்களமான, சிவப்பு நிறமுடைய பவழ மாலையினை உன் கரங்களில் வைத்துள்ளாய்.

தாளம்: கண்ட ஜாதி த்ரிபுட தாளம் - ஆதி தாளம் போல், அனால் நடு விரல் எண்ணிய பிறகு ஆள்காட்டி விரலையும் எண்ண வேண்டும். மொத்தம் 9 அக்ஷரங்கள் உள்ளது இத்தாளம். அதாவது, 
1 தட்டு = 1
சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல், ஆள் காட்டி விரல் = 4
பின் 
1 தட்டு, 1 திருப்பு, 1 தட்டு, 1 திருப்பு = 4

மொத்தம் = 1+4+4 = 9

2 கலை என்றால், இருமுறை ஒவ்வொரு அங்கங்களையும் செய்ய வேண்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

1 comment:

  1. அருமையான பதிவு தேடி தேடி இன்று தான் கிடைத்து.

    ReplyDelete